×

குழித்துறையில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மார்த்தாண்டம், டிச.19: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் மீது நேஷனல் ஹெரால்டு வழக்கு மற்றும் பொய்யாக தொடர்ந்து மத்திய பாஜக அரசு வழக்கு பதிவு செய்து வருவதாக கூறி குழித்துறை சந்திப்பில் நேற்று குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மேல்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர், குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா ரவி சங்கர், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் ,ஜவகர் பால் மஞ்ச் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், அனைத்து துறை நகர தலைவர் சுரேஷ் ,மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .போராட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags : Congress ,Kuzhithurai ,Union government ,Marthandam ,Kumari… ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...