×

தொடர்ந்து மது விற்பனை வியாபாரி கைது

மார்த்தாண்டம், டிச.19: களியக்காவிளை மடிச்சல் ஈஞ்சப்பிரிவினை பகுதியைச் சேர்ந்தவர் சத்யதாஸ் (57 ). இவர் படந்தாலுமூட்டில் இருந்து மடிச்சல் செல்லும் சாலையில் பழம் மற்றும் ஜூஸ் விற்பனை
செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் அரசு மதுபான கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இதை களியக்காவிளை போலீசார் கடந்த ஆண்டு இவரை 4 முறை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த மாதம் மட்டும் 2 முறை கைது செய்தனர்.பின்னர் ஜாமீனில் வந்தார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடையில் மதுபானம் விற்பது போன்று வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதை அடுத்து விரைந்து சென்ற களியக்காவிளை போலீசார் சத்யதாசை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Marthandam ,Sathya Das ,Madichal, Kaliyakavilai ,Patantalumoot ,Madichal ,
× RELATED திருத்தணியில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி