×

திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டிடத்திற்கு ‘பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி’ பெயர்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டிடத்திற்கு “பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி” என பெயரிடப்படும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் நாளங்காடி 81 கடைகளுடன் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

பழைய மார்க்கெட் தற்போதைய மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததாலும், சிதிலமடைந்து மோசமான நிலையில் இருந்ததாலும், பழைய கட்டிடத்தினை இடித்து, அப்புறப்படுத்தி 97 கடைகளுடன் புதியதாக நாளங்காடி கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 18.08.2023 அரசாணை வெளியிட்டது.

அதன்படி, கட்டப்படும் நாளங்காடியின் அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. புதியதாக கட்டப்பட்டுள்ள நாளங்காடிக்கு “பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி” என்று பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டிடத்திற்கு ‘பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி’ பெயர்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Thiruthani Municipality ,THIRUTHANI ,PERUNDALIWAR KAMARASAR KALANGADI ,Municipal Executive Director ,Thiruvallur District, Thiruthani Municipality ,M. Po. ,C Road ,Dinakaran ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...