- பெண்கள் பிரீமியர் லீக்
- குஜராத்
- மெக் லானிங் சரவேதி
- லக்னோ
- டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி
- குஜராத் ஜயண்ட்ஸ்
- பெண்கள் பிரீமியர் லீக் T20
- போட்டியில்
- மெக் லானிங்
- குஜராத் மகளிர் பிரீமியர் லீக்
- தின மலர்
லக்னோ: மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. மெக் லேனிங் 57 பந்துகளில் 92 ரன் குவித்து அவுட்டானார். 20 ஓவர் முடிவில் டெல்லி 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்திருந்தது. குஜராத் அணியின் மேக்னா சிங் 3, தியோந்திர தோட்டின் 2 விக்கெட் வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து, 178 ரன் வெற்றி இலக்குடன் குஜராத் ஆடத் தொடங்கியது. குஜராத் அணியின் ஹர்லீன் தியோல் அதிகபட்சமாக 70 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பெத் மூனே 44 ரன் எடுத்தார். டெல்லி அணியின் பாண்டே, ஜோனசன் ஆகியோர் தலா 2 விக்கெட், மின்னு 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநேர முடிவில் குஜராத் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
The post மகளிர் பிரீமியர் லீக் குஜராத் அபார வெற்றி: மெக் லேனிங் சரவெடி appeared first on Dinakaran.
