×

இளம் தெ.ஆ.வுக்கு எதிரான 3வது ஓடிஐ வைபவ் வந்தால் வைபோகமே: 233 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

பெனோனி: இளம் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இளம் இந்தியா, 233 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இளம் இந்தியா கிரிக்கெட் அணி, 19 வயதுக்கு உட்பட்டோர் மோதும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. நேற்று நடந்த 3வது போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஆரோன் ஜார்ஜ், கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேகத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டு முதல் விக்கெட்டுக்கு 227 ரன் விளாசினர். வைபவ், 74 பந்துகளில் 10 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 127 ரன், ஆரோன் 106 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 118 ரன் எடுத்தனர். 50 ஓவரில் இளம் இந்தியா 7 விக்கெட் இழந்து 393 ரன் குவித்தது. பின்னர் ஆடிய இளம் தென் ஆப்ரிக்கா, 15 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கடைசியில், 35 ஓவரில் 160 ரன்னுக்கு ஆல் அவுட்டானதால், இந்தியா 233 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்று, தென் ஆப்ரிக்காவை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. இந்தியா தரப்பில் கிஷாண் சிங் 3, முகம்மது இனான் 2 விக்கெட் சாய்த்தனர். தொடர் மற்றும் ஆட்ட நாயகனாக வைபவ் சூர்யவன்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags : Young South Africa ,India ,Benoni ,Young India ,South Africa ,
× RELATED ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் புலியாய்...