- மலேசியா ஓப்பன் பேட்மிண்டன்
- சிந்து
- கோலா லம்பூர்
- பிவி சிந்து
- மலேசியா ஓபன் பேட்மிண்டன் பெண்கள்
- கோலாலம்பூர், மலேசியா
கோலாலம்பூர்: மலேசியா ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து – தைவான் வீராங்கனை சுங் சுவோ யுன் மோதினர். துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய சிந்து முதல் செட்டை 21-13 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். 2வது செட்டில் இரு வீராங்கனைகளும் விட்டுக் கொடுக்காமல் ஆவேசமாக மோதியதால் நீண்ட நேரம் போட்டி நீடித்தது. கடைசியில் 22-20 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை சிந்து வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் நேற்று இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை, தைவான் வீரர்கள் யாங் போ ஹான், ஜே.எச்.லீ இணையுடன் மோதினர். இப்போட்டியில் அட்டகாசமாக ஆடிய இந்திய வீரர்கள், 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
