×

முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி அவரை நேற்று நேரில் சந்தித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். இதுதொடர்பாக டிவிட்டரில் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:

பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர், தி.மு.க., தலைவர், என்னுடைய அருமை நண்பர் ஸ்டாலின் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென நேரில் சந்தித்து வாழ்த்தினேன். தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழகத்தைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு. இவ்வாறு அறிக்கையில் கமல் கூறியுள்ளார்.

 

The post முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Chief Minister ,Chennai ,M.K. Stalin ,Makkal Needhi Maiam ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...