×

மத வெறுப்பு பேச்சு பாஜ தலைவர் பி.சி.ஜார்ஜ் சிறையில் அடைப்பு

திருவனந்தபுரம்: கேரள பாஜ மூத்த தலைவர் பி.சி. ஜார்ஜ். கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பி.சி. ஜார்ஜ் பேசினார். இது தொடர்பாக பி.சி. ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈராற்றுபேட்டை போலீசில் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பி.சி. ஜார்ஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ஆனால் அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் பி.சி. ஜார்ஜை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் நேற்று அவர் ஈராற்றுபேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் பி.சி. ஜார்ஜை 14 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

The post மத வெறுப்பு பேச்சு பாஜ தலைவர் பி.சி.ஜார்ஜ் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,B.C. George ,Thiruvananthapuram ,Kerala ,B.C. George… ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...