மணப்பாறை, பிப்.21: வையம்பட்டி அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர். மணப்பாறை அடுத்த இளங்காகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம் (21). இவர் வையம்பட்டி பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, அத்துமீறி நடந்து கொண்டு தற்போது திருமணத்திற்கு மறுத்ததாக தெரிகிறது. இதனால் அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இப்ராஹிமை கைது செய்தனர்.
The post திருமண ஆசைகாட்டி இளம் பெண்ணை ஏமாற்றியவர் கைது appeared first on Dinakaran.
