திருச்சி, டிச. 31: மண்ணச்சநல்லூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெற்குப்பை கிராமத்தில் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் மணிராஜா(20), மண்ணச்சநல்லூர் புள்ளம்பாடி வாய்க்கால் பகுதியில் போதை மாத்திரை, போதை மருந்து, போதை ஊசி, விற்பதாக எஸ்பிக்கு செல்வ நாகரத்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் போில் மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையில், எஸ்ஐ, காவலர்கள், மண்ணச்சநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது நொச்சியம் புது வாய்க்கால் அருகே போதை மாத்திரை, போதைமருந்து, போதை ஊசி, விற்றது தெரிய வந்தது. அவரிடமிருந்து டூவீலர், ரூ. 3,080 செல்போன், பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
