- Thiruverumpur
- திருச்சி
- பள்ளி கல்வி அமைச்சர்
- அன்பில் மகேஷ்
- ஆர் 430 வெங்கூர்
- முதன்மை வேளாண் கூட்டுறவு கடன்
- வி.எஸ். நகர்
திருச்சி, டிச.27: திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட R 430 வேங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய நியாய விலை கடை கட்டிடத்தை வி.எஸ்.நகரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்த நியாய விலை கடை திறப்பினால் 530 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள்.
நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் மாரிச்சாமி,வேங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு சார்பதிவாளர். செயலாட்சியர், பொது விநியோகத் திட்ட கள அலுவலர் கபிலன், திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர் அறிவழகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
