- முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி
- முன்னாள் மாணவர் சங்க சந்திப்பு விழா
- முசிறி
- முதல்வர்
- கணேசன்
- துணை கண்காணிப்பாளர்
- ராஜன்
- வழக்கறிஞர்
- காமராஜ்
முசிறி, டிச. 27: முசிறி அறிஞர்அண்ணா அரசு கலை கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சந்திப்பு விழா நடைபெற்றது. முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற துணை கண்காணிப்பாளர் இராஜன், வழக்கறிஞர் காமராஜ் சிறப்பு அழைப்பர்களாக கலந்து கொண்டு கல்லூரியில் பயின்ற காலத்தில் நிகழ்ந்த அறிவார்ந்த செயல்களை பற்றி எடுத்து கூறினர்.
இயற்பியல் துறை தலைவர் பாலசந்திரன், இயற்பியல் துறை பேராசிரியர் மருதை வீரன், கனிணிதுறை பேராசிரியர்கள்சின்ன துறை, ராஜேந்திரன் பேராசிரியை பிரபாவதி, வரலாற்று துறை தலைவர் பேராசிரியை கல்பனா, பேராசிரியர் சிவக்குமார் வரலாற்று துறை பேராசிரியை சுகந்தி, பொருளாதார துறை பேராசிரியர் கொடியரசு, விலங்கியல் துறை பேராசிரியர் வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கணித துறை பேராசிரியர் ரமேஸ் வரவேற்றார். முடிவில் வரலாற்று துறை பேராசிரியை சுதா நன்றி கூறினார்.
