துவரங்குறிச்சி, ஜன.1: துவரங்குறிச்சி பேருந்து நிலையம் பகுதியில் மதுபாட்டில் பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் மதுபாட்டில் பது க்கி விற்பனை செய்வதாக திருச்சி எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து எஸ்பி தனிப்படை பிரிவு போலீசார் துவரங்குறிச்சி பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டு இருந்தவரை தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
அயன்பொருவாயை சேர்ந்த பால்ராஜ் மகன் நாகராஜ் (29), என்பவர் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்து 47 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பிறகு துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
