×

தொட்டியம்-தா.பேட்டை பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தொட்டியம், டிச.31: தொட்டியம், தா.பேட்டை பகுதி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடப்பட்டது.திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா ஏலூர்ப்பட்டி அருகே தலைமலைப்பட்டி காசிவிஸ்வநாதர் மற்றும் சஞ்சீவிராயர் பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் பெருமாளுக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.  தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சுவாமி எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் தா.பேட்டையில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபாலசுவாமி கோவில், ருக்மணி, பாமா சமேத ராஜகோபால சுவாமி, தேவானூர் கிராமத்தில் பாமா, ருக்மணி சமேத ஆதிநல்லேந்திர பெருமாள், உத்தண்டம்பட்டி கிராமத்தில் பூமாதேவி, நீலாதேவி சமேத கலியுக ராஜகோபால் சுவாமி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

 

Tags : Perumal ,Thottiyam-Th.pettai ,Thottiyam ,Perumal temples ,Th.pettai ,Vaikunta Ekadashi festival ,Kasi Viswanathar ,Sanjeevirayar Perumal temples ,Thalaimalaipatti ,Elurpatti ,Thottiyam taluka ,Trichy ,
× RELATED வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் தப்பிக்க...