×

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா கோப்பையை வெல்ல ரோகித், கோஹ்லி பார்மில் இருப்பது அவசியம்: முத்தையா முரளிதரன் பேட்டி

கொழும்பு: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல ரோகித் சர்மாவும். விராட் கோஹ்லியும் பார்மில் இருக்க வேண்டியது அவசியம் என இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.

இந்நிலையில் சுழற்பந்து ஜாம்பவானான இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கூறியதாவது:- இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோஹ்லியும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். கிரிக்கெட் வல்லுனர்கள் சொல்வது போல வீரர்களின் தரம் என்பது நிரந்தரமானது, பார்ம் என்பது தற்காலிகமானது. நிச்சயம் அவர்கள் பார்முக்கு திரும்புவார்கள். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சதம் விளாசி உள்ளார். கோஹ்லியும் விரைவில் பார்முக்கு வந்து விடுவார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பட்டம் வெல்ல அவர்கள் இருவரும் பார்மில் இருக்க வேண்டியது அவசியம். இந்த தொடர் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் துபாய் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இந்த தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு பிரதானமானதாக இருக்கும்.

தற்போது உலக கிரிக்கெட்டில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என துணை கண்ட அணிகள் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என இரண்டிலும் சிறந்த பவுலிங் படையை கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணியும் பவுலிங்கில் சிறப்பாக உள்ளது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ரோகித் அசத்தினால் கோப்பை நமக்குதான்;
இந்திய அணியின் மாஜி கேப்டன் முகமது அசாருதீன் கூறுகையில் “சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துக்கள். ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா அசத்தும் பட்சத்தில் நாம் கோப்பையை வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை. சரியான நேரத்தில் அவர் பார்முக்கு திரும்பியுள்ளார். அவர் நேற்று முன்தினம் நன்றாக விளையாடி சாதனைகளை முறியடித்ததாக கேள்விப்பட்டேன். அதற்காக அவரை மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். ஓய்வு குறித்து ரோகித் சர்மா தான் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் ஒரு வீரருக்குத்தான் தன் ஆட்ட திறன் மற்றும் ஆர்வம் எந்தளவுக்கு இருக்கிறது என்பது தெரியும்’’ என்றார்.

The post சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா கோப்பையை வெல்ல ரோகித், கோஹ்லி பார்மில் இருப்பது அவசியம்: முத்தையா முரளிதரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rohit ,Kohli ,India ,Muttiah Muralitharan ,Colombo ,Rohit Sharma ,Virat Kohli ,ICC ,Dinakaran ,
× RELATED வெ.இ.க்கு எதிரான 3வது டெஸ்டில்: வெற்றி...