×

வேலூர் இப்ராகிம் மீது எஸ்.பியிடம் புகார்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் செயலாளர் கலிலுர் ரகுமான் தலைமையில், நிர்வாகிகள் அப்துல்ரகுமான், அலிமஸ்தான், சாதிக்பாட்ஷா ஆகியோர், நேற்று சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ராவத்திடம் மனு அளித்தனர். மனுவில், ‘‘பாஜ சிறுபான்மை பிரிவு தேசிய நிர்வாகியாக பதவி வகித்து வரும் வேலூர் இப்ராகிம், சமீப காலமாக இனவாதத்தைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம்.பி நவாஸ்கனி மீது அவதூறு பரப்பும்விதமாகவும், அறுவறுக்கத்தக்க வகையிலும் பேட்டி கொடுத்துள்ளார். தொடர்ந்து இதுபோல் செயல்பட்டு வரும் வேலூர் இப்ராகிம் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேலூர் இப்ராகிம் மீது எஸ்.பியிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : SP ,Vellore Ibrahim ,Sivaganga ,Sivaganga District United Jamaat ,Kalilur Rahman ,Abdul Rahman ,Alimasthan ,Sadiqbadsha ,Ashish Rawat ,BJP ,Dinakaran ,
× RELATED புத்தாண்டு கொண்டாட கல்லூரி...