பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று மாலை புளியந்தோப்பு நெடுஞ்சாலை அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிவறையில் மர்ம நபர் ஒருவரை மடக்கி பிடித்தனர்.
அப்போது அவரிடம் இருந்து 7 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. விசாரணையில், புளியந்தோப்பு காந்தி நகரை சேர்ந்த வினோத்குமார் (35) என்பதும், இவர் போதை மாத்திரை விற்பதற்கு இவரது மனைவி சுதா (36) உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post போதை மாத்திரை விற்ற தம்பதி கைது appeared first on Dinakaran.