அருமனை: அருமனையை சேர்ந்தவர் பிவின்(29). இவர் நேற்று டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தபோது கேரள மாநில பதிவெண் கொண்ட டெம்போ நின்று கொண்டிருந்தது. மேலும் வாகனத்தி்ல் ் இருந்து இறைச்சி கழிவுநீர் கொட்டிக்கொண்டிருந்தது. இதனை கவனித்த பிவின் தனது செல்போனில் படம் பிடித்ததோடு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர் மற்றும் டிரைவர் சேர்ந்து பிவினை சரமாரியாக தாக்கினர். முகத்தில் காயத்துடன் பிவின் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். இதற்கிடையே போலீசார் கழிவுகளை ஏற்றி வந்து வாலிபரை தாக்கியதாக கேரள மாநிலம் ஆனாவூர் பகுதியை சேர்ந்த டிரைவர் புஷ்பராஜ்,ரெஜின்(42) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டார்.
The post இறைச்சி கழிவு ஏற்றி வந்த டெம்போவை படம் பிடித்த வாலிபர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.