- புத்தாண்டு தினம்
- பொலிஸ் ஆணையாளர்
- அருண்
- சென்னை
- புதிய ஆண்டு
- பெருநகர போலீஸ் கமிஷனர்
- அருண்…
- காவல்துறை கமிஷனர்
- தின மலர்
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் 31ம் தேதி மாலை முதல் 1ம் தேதி வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அறிவுறுத்தியுள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தலைமையில் 2025-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பகாவும் புத்தாண்டு கொண்டாட நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.
வரும் 31ம் தேதி இரவு 9 மணியிலிருந்து காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக்கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று அருண் அறிவுறுத்தியுள்ளார்.
The post புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31ம் தேதி முதல் பொதுமக்கள் 1ம் தேதி வரை கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை: போலீஸ் கமிஷனர் அருண் தகவல் appeared first on Dinakaran.