×

ஏர்கன் விளையாட்டு… வினையானது: சிறுவன் வயிற்றில் பாய்ந்த தோட்டா

திண்டுக்கல்: நத்தத்தை அடுத்த பெரிய மலையூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், தனது ெபற்றோருடன் சிறுமலை எஸ்டேட்டில் தங்கியிருந்து, தோட்ட வேலைகளை செய்து வருகிறார். நேற்று சிறுமலையை சேர்ந்த 10 வயது சிறுவன், ஏர்கன் ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது சிறுவனின் விரல்கள் தவறுதலாக அழுத்தியதில், ஏர்கன்னில் இருந்த தோட்டா அருகில் நின்றிருந்த 17 வயது சிறுவனின் வயிற்றுப்பகுதியில் பாய்ந்தது. இதில் காயமடைந்த அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

The post ஏர்கன் விளையாட்டு… வினையானது: சிறுவன் வயிற்றில் பாய்ந்த தோட்டா appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Malaiur ,Nurumali ,Girmala ,Airgan ,Dinakaran ,
× RELATED வீட்டிலிருந்து அரசியல் செய்வது விஜய்...