×

48வது புத்தகக் காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச நுழைவுச்சீட்டு: மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னையில் தென்னிந்தியாவின் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக 48வது புத்தகக் காட்சி நந்தவனம் ஒய்.எம்.சிஏ மைதானத்தில் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. மொத்தம் 900 அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அரங்கு எண்: 329, 330ல் தினகரன்- சூரியன் பதிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு, திரைத்துறை சார்ந்தவர்களுக்கு என ஏராளமான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால் புத்தக பிரியர்கள் மாணவர்களுக்கு புத்தகக் காட்சி மிகவும் பயனுள்ளதாகவே அமைகிறது. வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 வரை புத்தகக் காட்சி நடைபெறும் நிலையில் விடுமுறை நாட்களில் 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமானோர் புத்தகக் காட்சியை காண வருகின்றனர். மாணவர்கள் வருகை அதிகரிக்க வேண்டும், வாசிப்பு திறனை ஊக்குவிக்க வேண்டும் என பபாசி சார்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச நுழைவு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

புத்தகக் காட்சிக்கு வரும் மாணவர்களை கவரும் வகையில் பொம்மைகள், தள்ளுபடிகள் என பல பணிகளை பதிப்பாளர்கள் செய்துள்ளனர். குறிப்பாக 10% சலுகை விலையிலும் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவு ஆர்வம் கொண்டுள்ளனர்.

இன்றைய நிகழ்வு
‘நாம் எங்கே போகிறோம்?’ என்ற தலைப்பில் நாகப்பனும், புரட்டிப்போடும் புத்தகங்கள் ஜெயம் கொண்டானும், கவிஞர்களும் கவிதையும் என்ற தலைப்பில் தமிழறிஞர் செந்தூரனும் பேசுகின்றனர்.

The post 48வது புத்தகக் காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச நுழைவுச்சீட்டு: மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : 48th book fair ,Chennai ,book fair ,Booksellers and Publishers Association ,South India ,Nandavanam ,YMCA ,Dhinakaran- Suryan ,Dinakaran ,
× RELATED சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48-வது புத்தக கண்காட்சி தொடங்கியது.!!