×

முன்னாள் அமைச்சரால் கட்சி சீரழிவதாக கூறி அதிமுக மாஜி எம்எல்ஏக்கள் ஒருமையில் திட்டி மோதல்

சாத்தூர்: அதிமுக சார்பில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர் வடக்கு ரத வீதியில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பங்கேற்ற 205 பேரை சாத்தூர் நகர் போலீசார் கைது செய்து பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக தொண்டர்கள் மத்தியில் பேசினர். முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் பேசும்போது, திருச்சுழி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோஷ்டிமோதலால் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசினார்.

அப்போது அங்கிருந்த திருச்சுழி முன்னாள் எம்எல்ஏவான சிவசாமி, முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனை பார்த்து, ‘‘நீயும், ராஜேந்திரபாலாஜியும்தான் கட்சியை சீரழித்து வர்றீங்க. நீங்க யாரும் திருச்சுழி பக்கம் வராதீங்க. அவங்க பிரச்னையை அவங்க பாத்துட்டு போகட்டும்’’ என்று கூறினார். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் தொண்டர்கள் முன் திட்டிக்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post முன்னாள் அமைச்சரால் கட்சி சீரழிவதாக கூறி அதிமுக மாஜி எம்எல்ஏக்கள் ஒருமையில் திட்டி மோதல் appeared first on Dinakaran.

Tags : AIADMK MLAs ,minister ,Sattur ,AIADMK ,Sattur Nagar North Ratha Road ,Virudhunagar district ,Sattur Nagar ,Dinakaran ,
× RELATED சாத்தூர் நகர்மன்ற கூட்டம்