×

கல்வராயன்மலையில் பரபரப்பு விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த 104 கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல்

*2 பேர் கைது

கல்வராயன்மலை : கல்வராயன்மலையில் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 104 கிலோ எடை கொண்ட 21,500 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட கல்வராயன் மலையில் கஞ்சா விற்பதாகவும், பயிரிடுவதாகவும் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மணிபாரதி தலைமையிலான போலீசார் பெரிய பெருமாநத்தம் அருகே உள்ள சோலைமலை உச்சியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது முனியன் மகன் பருவதம் (43), பூஞ்சோலை மகன் கோவிந்தன் (32) ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் வளர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து சுமார் 104 கிலோ எடை கொண்ட 21,500 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை மூட்டைகளில் எடுத்துச்சென்றனர். தொடர்ந்து கஞ்சா செடி வளர்த்த பருவதம், கோவிந்தன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி ரஜத்சதுர்வேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post கல்வராயன்மலையில் பரபரப்பு விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த 104 கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kalvarayanmalai ,Kallakurichi ,
× RELATED கல்வராயன்மலையில் பரபரப்பு விவசாய...