×

துப்பாக்கி முனையில் கடத்தி ஆசிரியரை கட்டாய திருமணம் செய்த மணப்பெண்

பாட்னா: பீகாரில் அரசு வேலை செய்யும் ஆண்களுக்கு கடும் போட்டி இருப்பதால், அரசு பணியில் இருப்பவர்களை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து வைக்கும் நடைமுறை அதிகரித்துள்ளது. பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டம் ராஜவுராவை சேர்ந்த அவ்னீஷ் குமார் அண்மையில் ஆசிரியர் தகுதி தேர்வெழுதி அதில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து அவர் கதிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவ்னீஷ் குமாரை கடத்தி சென்று குஞ்சன் என்ற பெண்ணுக்கு துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். மணப்பெண்ணின் உத்தரவால்தான் இந்த கடத்தல் கல்யாணம் நடந்தது தெரிய வந்துள்ளது.

The post துப்பாக்கி முனையில் கடத்தி ஆசிரியரை கட்டாய திருமணம் செய்த மணப்பெண் appeared first on Dinakaran.

Tags : Bride ,Patna ,Bihar ,Avnish Kumar ,Rajaura ,Begusarai district ,
× RELATED பாட்னாவில் 16 வயது சிறுவன் சுட்டு கொலை