×

உத்தரகாண்ட் மாநிலம் முசோரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய போதை ஆசாமிகள்..!!

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் முசோரி அருகே ஷிவாகோலியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் அங்கே மது அருந்தியவாறு சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். பெட்ரோல் நிரப்பும் ஊழியர் சூரஜ் மாணி என்பவர் பெட்ரோல் நிலையத்தில் இருந்தபடி மது அருந்த வேண்டாம் என்று அவர்களிடம் கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நபர் தங்களின் நண்பர்களை வரவழைத்து பெட்ரோல் நிறுவன ஊழியரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் தாக்குதல் நடத்திய இளைஞர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடைப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post உத்தரகாண்ட் மாநிலம் முசோரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய போதை ஆசாமிகள்..!! appeared first on Dinakaran.

Tags : Mussoorie ,Uttarakhand ,Shivakoli ,Suraj Mani ,
× RELATED ‘ஐ லவ் யூ’ என வீடியோ அனுப்ப வைத்து...