- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- சத்தீஸ்கர்
- அருணாச்சல
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன்
- அருணாச்சல் மாநிலங்கள்
- தின மலர்
டெல்லி: கடும் எதிர்ப்பு எதிரொலியாக தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், போதிய வரவேற்பு இல்லாததால் சத்தீஸ்கர், அருணாச்சல மாநிலங்களில் 11 முக்கிய கனிமச் சுரங்கங்களின் ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில்; சத்தீஸ்கர், அருணாச்சலில் அமைந்துள்ள டங்ஸ்டன், குளுக்கோனைட் உள்ளிட்ட 4 கனிமச் சுரங்கங்களின் 4வது சுற்று ஏலத்திற்கு ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 கனிமச் சுரங்க ஏலத்தில் பங்கேற்க மூன்றுக்கும் குறைவான தொழில்நுட்ப தகுதி பெற்ற ஏலதாரர்கள் மட்டுமே விண்ணப்பித்து இருப்பதாக அதில் கூறப்பட்டு இருக்கிறது.
இதனால் 11 கனிமத் தொகுதிகளின் மின்னணு ஏலம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பே ஏலதாரர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் 3வது சுற்றில் 3 கனிமத் தொகுதிகளின் ஏலத்தையும், 2வது சுற்றில் 14 கனிமத் தொகுதிகளின் ஏலத்தையும், முதல் சுற்றில் 14 கனிமத் தொகுதிகளின் ஏலத்தையும் ஒன்றிய அரசு ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 4வது சுற்று ஏலத்தில் மொத்தமுள்ள 48 சுரங்கங்களில் 24 கனிமத் தொகுதிகள் விற்பனை செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு சமீபத்தில் கூறியிருந்தது. இந்நிலையில், போதிய வரவேற்பு இல்லாததால் தற்போது 11 கனிமத் தொகுதிகளின் ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஏலம் எடுக்க ஆளில்லை: சத்தீஸ்கர், அருணாச்சல மாநிலங்களில் 11 கனிமச் சுரங்கங்களின் ஏலத்தை ரத்து செய்த ஒன்றிய அரசு! appeared first on Dinakaran.