×

பாட்னாவில் 16 வயது சிறுவன் சுட்டு கொலை

பாட்னா: பாட்னாவில் 16 வயது சிறுவன் பிறந்த நாள் விழாவில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவின் கிருஷ்ணாபுரி நகரில் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்த சிறுவன், நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தன் பிறந்த நாள் விழாவை கொண்டாடி கொண்டிருந்தான். அப்போது விழாவுக்கு வந்திருந்த மர்ம நபர் ஒருவர் சிறுவனை சுட்டதில் படுகாயமடைந்தான்.

உடனே அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “ துப்பாக்கி சூடு நடத்திய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

The post பாட்னாவில் 16 வயது சிறுவன் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Patna ,Gandhi Nagar ,Krishnapuri ,Patna, Bihar ,
× RELATED துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி: சென்னை வாலிபர் கைது