×

திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: ஒரே சேலையில் தூக்கிட்டு காதல் ஜோடி தற்கொலை

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வேங்கனூரை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன் மகள் உபன்யா (18). வடக்கஞ்சேரியை அருகே சிம்புக்காட்டை சேர்ந்தவர் கண்ணன் மகன் சுகின் (23). இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் உபன்யாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காதலர்கள் ஒரு சேலையின் இரு முனைகளில், மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தனர்.

இந்நிலையில் கோயில் திருவிழாவை பார்த்து விட்டு உபன்யாவின் சகோதரர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது தங்கையும், காதலரும் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வடக்கஞ்சேரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: ஒரே சேலையில் தூக்கிட்டு காதல் ஜோடி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Unni Krishnan ,Upanya ,Venganur ,Kerala ,Kannan ,Sukin ,Simbukkad ,Vadakancheri ,
× RELATED வடக்கஞ்சேரியில் ஒரே சேலையில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை