×

2025ம் ஆண்டு முதல் கணினி முறையில் க்யூட் யூஜி தேர்வு

புதுடெல்லி: ஒன்றிய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக க்யூட் தேர்வு நடத்தப்படுகின்றது. இந்நிலையில் 2025ம் ஆண்டு க்யூட் தேர்வு தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் பேட்டி ஒன்றில், யூஜிசி அமைத்த மானியக்குழுவானது க்யூட் இளங்கலை தேர்வை மதிப்பாய்வு செய்து பல மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. கடந்த ஆண்டு போல இல்லாமல் 2025ம் ஆண்டு முதல் கணினி முறையில் தேர்வு நடத்தப்படும்.

மேலும் பாடங்களின் எண்ணிக்கை 63ல் இருந்து 37ஆக குறைக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் படிக்காத பாடங்களையும் க்யூட் -இளங்கலை பாடங்களை தேர்வு செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு அதிகபட்சம் 6 பாடங்கள் வரை விருப்ப பாடமாக தேர்வு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த முறை அதிகபட்சம் 5 பாடங்கள் வரை மட்டுமே தேர்வு செய்வதற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பாடத்தை பொறுத்து தேர்வு நேரமானது இனி 60 நிமிடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

The post 2025ம் ஆண்டு முதல் கணினி முறையில் க்யூட் யூஜி தேர்வு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,University Grants Committee ,Jagadish Kumar ,UGC ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...