×

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் கலவகுண்டா அணையில் தண்ணீர் திறப்பு

பொன்னை, டிச.5: பொன்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னை ஆற்றில் பரவலாக வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா அணையில் இருந்து நேற்று முன்தினம் 250 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து, நேற்று அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக 7 மதகுகள் வழியாக 700 கனஅடி தண்ணீர் பொன்னை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆந்திர மாநில பொதுப்பணித்துறை மற்றும் வேலூர் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் கலவகுண்டா அணையில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ponnai ,Kalavagunda dam ,Benjal ,Chittoor district ,Andhra State ,
× RELATED ஏரி உபரிநீர் 100 வீடுகளை சூழ்ந்தது பொதுமக்கள் பாதிப்பு பொன்னை பகுதியில்