×

கருப்பு பேட்ஜூடன் 2வது நாள் பணிக்கு வந்த திருக்கோயில் செயல் அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி

ேவலூர், டிச.21: 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து 613 இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் 2வது நாளாக பணிக்கு வந்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட செயல் அலுவலர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செயல் அலுவலர்களுடன் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்த வேண்டும். டாட்டன்ஹாம் அலுவலக நடைமுறையை செயல்படுத்த வேண்டும், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் செயல் அலுவலர்களுக்கு பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17ம் தேதி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆணையருக்கு கோரிக்கை வழங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 613 திருக்கோயில் செயல் அலுவலர்கள் நேற்று முன்தினம் முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து திருக்கோயில் அலுவலகங்களுக்கு பணிக்கு வந்தனர். நேற்று தொடர்ந்து 2வது நாளாக கருப்பு பேட்ஜூடன் அவர்கள் பணிக்கு வந்தனர். இதுதொடர்பாக திருக்கோயில் செயல் அலுவலர்களிடம் கேட்டபோது, வரும் 31ம்தேதிக்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கருப்பு பேட்ஜ் அணிந்து அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம். அறநிலையத்துறையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு துறையை மேம்படுத்தி வரும் தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளையும் செவிமடுத்து நிறைவேற்ற வேண்டும். 31ம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும்’ என்றனர்.

The post கருப்பு பேட்ஜூடன் 2வது நாள் பணிக்கு வந்த திருக்கோயில் செயல் அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி appeared first on Dinakaran.

Tags : Temple ,Yevalur ,Hindu Endowments Department ,Dinakaran ,
× RELATED அருப்புக்கோட்டையில் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்