- பாஜக
- கே.வி.குப்பம்.
- K.V.Kuppam
- காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றம்
- வேலூர் மாவட்டம்
- விட்டல்குமார்
- நாகல்
- தின மலர்
கே.வி.குப்பம், டிச.21: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே நடந்த பாஜக பிரமுகர் உயிரிழப்பு விவகாரத்தில் காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருவர் சரண்டர் ஆகியுள்ளனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த நாகல் கிராமத்தைச் சேர்ந்தவர் விட்டல் குமார்(47), இவர் பாஜ ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த 16ஆம் தேதியன்று மாலை சென்னாங்குப்பம் பகுதியில் சாலையோரம் ரத்த காயத்துடன் கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கே.வி.குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கே.வி.குப்பம் போலீசார் விட்டல் குமாரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அன்றிரவு அவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து எஸ்பி மதிவாணன் உத்தரவின்பேரில் கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பாஜ பிரமுகர் விட்டல் குமார் இறந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை தொடங்கினர். சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் நேற்று நாகல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கமல்ஹாசன்(24), கங்காதரன் மகன் சந்தோஷ்குமார்(26), ஆகிய 2பேர் நேற்று காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஜெயகணேஷ் முன்பு சரணடைந்தனர். 2பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
The post பாஜ பிரமுகர் கொலையில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்டர் கே.வி.குப்பம் அருகே நடந்த appeared first on Dinakaran.