×

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ராட்சத விளம்பர பலகை மின்கம்பிகள் மீது விழுந்ததால் பரபரப்பு

வேலூர், டிச.18: வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் மின்கம்பிகள் மீது ராட்சத விளம்பரப் பலகை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்தது. இந்த பங்க் சில மாதங்களாக செயல்படவில்லை. இந்நிலையில், இந்த பெட்ரோல் பங்கில் இருந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அங்கிருந்த ராட்சத கம்பத்துடன் நிறுவப்பட்டிருந்த விளம்பர பலகை நேற்று மாலை கிரேன் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த ராட்சத கம்பத்துடன் கூடிய விளம்பர பலகை அருகில் இருந்த மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனால், மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. எனினும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்து விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு முதலில் மின்கம்பிகள் மீது விழுந்து கிடந்த ராட்சத கம்பத்துடன் கூடிய விளம்பர பலகை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, மின்கம்பிகள் சரிசெய்யப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டது.

The post வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ராட்சத விளம்பர பலகை மின்கம்பிகள் மீது விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sathuvachari ,Vellore ,Sathuvachari Collector ,Dinakaran ,
× RELATED மனைவியை தவறான எண்ணத்தில் பார்ப்பதாக...