- பாஜக
- மில்கைப்பொடி வெங்கடேசன்
- சென்னை
- செங்குன்ராம்
- கே.ஆர்.வெங்கடேசன்
- வீரவாஞ்சிநாதன் தெரு, பி.டி.மூர்த்தி நகர்
- நல்லூர்
- பஞ்சாயத்து
- செங்குண்டத்தா
- பாஜக ஓபிசி
சென்னை: செங்குன்றம் அருகே பாஜ மாநில நிர்வாகி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பி.டி.மூர்த்தி நகர், வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன். இவர், பாஜ ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆவடி மாநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீசார், பாஜ பிரமுகர் வீட்டில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
2023ம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டில் நில மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதில், பல்வேறு இடங்களில் நடைபெறும் சோதனையின் ஒரு பகுதியாக பாஜ நிர்வாகி வீட்டிலும் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது, பல்வேறு ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கடந்தாண்டு வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பாஜ நிர்வாகி வீட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போதும் பணப்பட்டுவாடா ஏதேனும் நடைபெற்றதா என்பதற்காக சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
The post பாஜ மாநில நிர்வாகி மிளகாய்பொடி வெங்கடேசன் வீட்டில் போலீசார் சோதனை appeared first on Dinakaran.