- கஸ்தூரி
- செயலகம்
- எஸ்சி-எஸ்டி
- சென்னை
- தலைமைச் செயலக சங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- செயலகம் சங்கம்
- வெங்கடேசன்
- ஹரிஷங்கர்
- தலைமை செயலகம்
- தின மலர்
சென்னை: அரசு ஊழியர்களை ஊழல்வாதிகள் என பேசிய நடிகை கஸ்தூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலகம் சங்கம், எஸ்சி-எஸ்டி பணியாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:நடிகை கஸ்தூரி கடந்த 4ம் தேதி விவாத நிகழ்ச்சியில், இட ஒதுக்கீடு வந்த பின்னர் தான் லஞ்ச லாவண்யம் மலிந்து விட்டது.
இடஒதுக்கீட்டினால் அரசுப் பணிக்கு வந்தவர்கள் செய்த ஊழல்களால் பல்வேறு வகைகளில் சொத்துகளை சேர்த்துள்ளதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளளார். இது தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை கஸ்தூரி மீது தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி-எஸ்டி பணியாளர் நலச் சங்க பொது செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் டி.மணிமொழி வெளியிட்ட அறிக்கை:நடிகை கஸ்தூரி, இடஒதுக்கீட்டில் அரசு பணிக்கு வந்தவர்கள் ஊழல்கள் செய்து சொத்துகளை சேர்த்துள்ளதாக வன்மத்தை கக்கியுள்ளார். நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
The post அரசு ஊழியர்களை ஊழல்வாதிகள் என பேசிய நடிகை கஸ்தூரி மீது கடும் நடவடிக்கை தேவை: தலைமை செயலகம், எஸ்சி-எஸ்டி பணியாளர் சங்கங்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.