×

லியோவில் என்ன கேரக்டர்? மிஷ்கின் பதில்

சென்னை: விஜய்யின் லியோவில் நடித்திருப்பது பற்றி இயக்குனர் மிஷ்கின் ஒரு விழாவில் பேசினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்பட பலர் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது, அதில் மிஷ்கினும் பங்கேற்றார். படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விழா ஒன்றில் மிஷ்கின் கலந்துகொண்டார். அதில் அவர் பேசும்போது, ‘லியோ படத்தில் சிறிய வேடத்தில்தான் நடிக்கிறேன். ஆனாலும் எங்கு போனாலும் அதைப் பற்றித்தான் என்னிடம் பலரும் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. விஜய், லோகேஷ் கனகராஜ் இணைந்தால் அது கண்டிப்பாக ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமாகத்தான் இருக்கும். லியோ கண்டிப்பாக அதுபோல் அமையும். இதில் எந்த மாதிரியான கேரக்டர் நான் ஏற்றிருக்கிறேன் என கேட்கிறார்கள். அதை சொல்லக் கூடாது என்பது லோகேஷின் அன்பு உத்தரவு. நான் உதவி இயக்குனராக இருந்தபோது, விஜய் படத்தில் பணியாற்றினேன். அப்போது பார்த்த அதே விஜய்யைத்தான் இப்போதும் பார்க்கிறேன். அதே அன்புடன் இருக்கிறார்’ என்றார்.

The post லியோவில் என்ன கேரக்டர்? மிஷ்கின் பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Leo ,Mishkin ,CHENNAI ,Vijay ,Lokesh Kanagaraj ,Sanjay Dutt ,Trisha ,Priya Anand ,Arjun ,Gautham Menon ,Myshkin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிம்மம்