×
Saravana Stores

கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்’ பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரை சேர்ந்த கோட்டை அமீர் பெயரால் ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்’ ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் முதல்வரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. ரூ25,000க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினை பெறத் தகுதியுடையவராவர்.

இந்த பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.வரும் 26.01.2025 அன்று குடியரசு தின விழாவின்போது வழங்கப்படவுள்ள பதக்கத்திற்கு தகுதியானவரை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு 25.11.2024-க்கு முன்பாக அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் நபருக்கு முதலமைச்சரால் 26.01.2025 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Kottai ,
× RELATED பாம்பு கடி தொடர்பான சிகிச்சை...