×

நாகர்கோவிலில் கஞ்சாவுடன் வாலிபர் கைது: வீட்டில் சோதனை

நாகர்கோவில், நவ.6: நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசார், வடசேரி புதுக்குடியிருப்பு சுப்பையார் குளம் பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்ற, வாலிபரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர் முன்னுக்கு முன் முரணாக பேசியதால் அவரிடம் சோதனை நடந்தது. இதில் அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வடசேரி புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (37) என்பது தெரிய வந்தது.

அவரிடம் இருந்து 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்தனர். அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. ரவிக்குமார் இறைச்சி வெட்டும் தொழில் செய்து வருகிறார். அவரது நண்பர் ஒருவரின் மூலம் கஞ்சா கிடைத்ததாக கூறி உள்ளார். இதன் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நாகர்கோவிலில் கஞ்சாவுடன் வாலிபர் கைது: வீட்டில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Nagercoil Liquor Prohibition Division ,Pudukudiripu Subhaiyar Kalam ,Vadaseri ,Dinakaran ,
× RELATED நெசவாளர் காலனியில் சாலைப்பணி மேயர் தொடங்கி வைத்தார்