திருச்சி, ஜன.3: திருச்சி, கருமண்டபம், ஜெயா நகர் விஸ்தரிப்பை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ஜஸ்டின் கிலாரா (46). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் துப்புரவு பணியாளராக ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கிலாரா கடந்த டிச.30ம் தேதி வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அவரது வீட்டின் அருகே சென்றபோது எதிரே பைக்கில் வந்த மர்மநபர் கிலாரா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினார். இது குறித்து கிலாரா அளித்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.
The post முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மருத்துவமனை தரம் உயர்த்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.