×

நெசவாளர் காலனியில் சாலைப்பணி மேயர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், டிச.28: நாகர்கோவில் நெசவாளர் காலனியில் சாலைப்பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி 17வது வார்டு நெசவாளர் காலனி குறுக்குத்தெரு மற்றும் சார்லஸ் தெருக்களில் சாலை சீரமைப்பு பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் செல்வகுமார், கவுன்சிலர் கௌசிகி, திமுக பகுதி செயலாளர் சேக் மீரான், மாநகர பிரதிநிதி டேனி, வட்டச் செயலாளர் பிரபாகரன், அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராஜன், பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, வட்டவிளை அரசு நடுநிலைப்பள்ளியில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் குமரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகம் சார்பில், கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மேயர் மகேஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில், பொது மருத்துவம், சர்க்கரை நோய், இதய நோய், காது, மூக்கு, தொண்டை உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், 20 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. முகாமில், மாநகராட்சி மருத்துவர்கள் ஆனந்த ஜோதி, சஜின், கவுன்சிலர் அனிலா சுகுமாரன், மாநகராட்சி புள்ளியியல் உதவியாளர் சுப்பிரபா, பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நெசவாளர் காலனியில் சாலைப்பணி மேயர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mayor ,Weavers Colony ,Nagercoil ,Mahesh ,Weavers Colony, Nagercoil ,Weavers Colony Crossroads ,Charles Streets ,Ward 17 ,Nagercoil Corporation ,Deputy ,Mary… ,Dinakaran ,
× RELATED புன்னைநகரில் சாலை சீரமைப்பு பணி