வில்லிபுத்தூர், ஜன.3: வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மார்கழி உற்சவம் பகல் பத்து மண்டபத்தில் அரையர் சேவையை கலெக்டர் பார்த்து ரசித்தார். வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான நேற்று மதியம் பகல் பத்து மண்டபத்தில் திருப்பாவை வியாக்கியானம் அரையர் சேவை நடைபெற்றது.
வில்லிபுத்தூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கலெக்டர் ஜெயசீலன் நேற்று மதியம் பகல் பத்து மண்டபத்திற்கு வந்து அரையர் சேவையை பார்த்து ரசித்தார். முன்னதாக பகல் பத்து மண்டபத்தில் பெரிய பெருமாள், தேவி, பூமாதேவி, ஆண்டாள், ரெங்க மன்னார் ஆகியோரை சாமி தரிசனம் செய்தார். தாசில்தார் பாலமுருகன், நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், ஆண்டாள் கோவில் கண்காணிப்பாளர் ஆவடைதாய், வருவாய் ஆய்வாளர் மலர்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் appeared first on Dinakaran.