- தீபாவளி
- சிட்னி முருகன் கோவில்
- கான்பெர்ரா
- அந்தோனி அல்பனீஸ்
- தமிழர்கள்
- ஆஸ்திரேலியா
- முருகன் கோயில்
- சிட்னி
கான்பெரொ: தீபாவளி பண்டிகையையொட்டி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சிட்னி முருகன் கோயிலுக்கு சென்று தமிழர்களுடன் பண்டிகையை கொண்டாடினார். ஆஸ்திரேலியாவில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிட்னியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலுக்கு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேற்று சென்றார். அங்கு கோயிலுக்கு வந்திருந்த தமிழர்களுடன் பிரதமர் அல்பானீஸ் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. சிட்னி முருகன் கோயிலில் ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சமூகத்துடன் இணைந்திருப்பது மிகவும் அருமை.
இந்த கோயில் ஒவ்வொரு நாளும் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கிறது. மேலும் மேற்கு சிட்னியின் தெற்காசிய இந்து சமூகத்தினரின் சரணாலயமாக கோயில் மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல் சீக்கியர்களின் பண்டிகையான பாண்டி சோர் தினமான நேற்று சிட்னி, கிளவுன் உட் பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கும் அவர் சென்றார்.
The post சிட்னி முருகன் கோயிலில் தீபாவளி கொண்டாடிய ஆஸ்திரேலிய பிரதமர் appeared first on Dinakaran.