×

சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை சட்டம் அமலுக்கு வந்தது


ஜூரிச்: சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக ஆளும் பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், புர்காவுக்கு தடை என்ற உத்தரவு தொடர்பான தீர்மானம் 2021ல் நிறைவேற்றப்பட்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தது. இந்த தடை உத்தரவு, விமானங்கள், தூதரக வளாகங்கள் ஆகிய இடங்களில் அமல்படுத்தப்படாது. வழிபாட்டு தலங்கள், பிற புனித தலங்களிலும், மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது.

உடல்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைத்து கொள்ளலாம். மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக அவ்வாறு செய்யக்கூடாது. தடையை மீறுபவர்கள் உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மறுத்தால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை செலுத்த நேரிடும் என தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று அமலுக்கு வந்தது.

The post சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை சட்டம் அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Switzerland ,Zurich ,Governing Council ,Burga ,Dinakaran ,
× RELATED விஜய் பட டான்ஸ் மாஸ்டரின் புது பாய்ச்சல்