×

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையில் பாம்பு ஆண்டினை வரவேற்கத் தயாராகும் சீன மக்கள்..!!

சீனா: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையில் சீன மக்கள் பாம்பு ஆண்டினை கொண்டாட முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். உலகம் முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு பிறந்துவிட்டாலும் சந்திர நாட்காட்டியை கடைபிடிக்கும் சீனாவை பொறுத்தவரை புத்தாண்டு ஜனவரி 29ஆம் தேதி தான் பிறக்கிறது. சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு உயிரினத்தின் பெயரால் அடையாள படுத்தப்படும் நிலையில் தற்போதைய டிராகன் ஆண்டு விடைபெற்று பாம்பு ஆண்டு பிறக்க உள்ளது. இதை அடுத்து சீனா முழுவதும் எதிர்வரும் பாம்பு ஆண்டினை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

சீனாவின் நகரங்கள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டுள்ளன. சாலைகள், வீடுகள், வணிக வளாகங்கள், பாம்பு வடிவிலான மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளன. பாம்பு ஆண்டினை வரவேற்கும் விதமாக கடை வீதிகளில் பாம்பு பொம்மைகளின் விற்பனை களைகட்டி வருகிறது. செல்ல பிராணிகள் விற்பனை மையங்களில் வீட்டில் வைத்து வளர்ப்பதற்காக ஏராளமான நஞ்சில்லா பாம்புகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பாம்புகளை ஆன்மீகம், வளர்ச்சி மற்றும் நீண்ட ஆயுளின் அடையாளமாக கருதும் சீனர்கள் ஜனவரி 29ஆம் தேதி பிறக்கும் பாம்பு ஆண்டு தங்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

The post ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையில் பாம்பு ஆண்டினை வரவேற்கத் தயாராகும் சீன மக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : English New Year ,China ,Year ,
× RELATED ஆங்கில புத்தாண்டு மட்டுமல்ல… இன்னும்...