×

நிழற்கூடம் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

அரூர், அக்.29: அரூர் அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தினமும் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களின் வசதிக்காக மருத்துவமனை முன்பாக நிழற்கூடம் இருந்தது. இந்த நிழற்கூடம் மீது லாரி மோதியதில் சேதமடைந்தது. இதையடுத்து நிழற்கூடத்தை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அந்த சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றது. நான்கு வழிச்சாலை பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அரசு மருத்துவமனை அருகே மீண்டும் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் தினந்தோறும் சிகிச்சைக்காக வரும் ஆயிரக்கணக்கான மக்கள், வெயில் மற்றும் மழைக்கு ஒதுங்குவதற்கு கூட வழியில்லை. கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள், நோயாளிகள் நலன் கருதி, புதிய நிழற்கூடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நிழற்கூடம் அமைக்க மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Aroor ,Aroor Government Hospital ,Dinakaran ,
× RELATED மறியலில் ஈடுபட்ட 23 பேர் மீது வழக்கு