- தர்மபுரி
- அம்பேத்கர் நகர் புது காலனி, அரூர், தர்மபுரி மாவட்டம்
- அரூர்-திருவண்ணாமலை சாலை
- வருவாய் திணைக்களம்
- அரூர்
- தின மலர்
தர்மபுரி, டிச.21: தர்மபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகர் புதுகாலனியை சேர்ந்த பொதுமக்கள் ஏரிக்கரை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, நேற்று அரூர்-திருவண்ணாமலை சாலையில், கால்நடைகளுடன் 3 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனிடையே, கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி, அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், மறியலில் ஈடுபட்டதாக சரவணன் (50), ராகுல் சித்தார்த் (30), பிரசாந்த் (30), கிருஷ்ணம்மாள் (45), வேடியப்பன்(54) உள்ளிட்ட 23 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post மறியலில் ஈடுபட்ட 23 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.