×
Saravana Stores

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்ப்பு வழக்கு; 3 பேரிடம் என்.ஜ.ஏ அதிகாரிகள் விசாரணை: சிறப்பு நீதிமன்றம் அனுமதி

பூந்தமல்லி: தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் 3 பேரை என்.ஜ.ஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஹிஷாப் உத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக கடந்த மே மாதம் ராயப்பேட்டையைச் சேர்ந்த அமீது உசேன், அமீது மன்சூர் என்ற சுவடுமன்சூர், அப்துல் ரகுமான், மவுரீஸ், அகமது அலி உமரி, காதர் நவாஸ் செரீப் என்ற ஜாவித், பைசல் உசேன் ஆகிய 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் அமீது உசேன், மவுரீஸ், பைசல் உசேன் ஆகிய மூன்று பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. நீதிபதி இளவழகன் மனுவை விசாரித்து அமீது உசேனுக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்கவும், மவுரீசுக்கு 2 நாட்கள், பைசல் உசேனிற்கு 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதற்காக கொண்டு சென்றனர்.

The post தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்ப்பு வழக்கு; 3 பேரிடம் என்.ஜ.ஏ அதிகாரிகள் விசாரணை: சிறப்பு நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : N. J. A. ,Poonthamali ,N. J. A ,Poontamalli Special Court ,Hishap Ud Tahrir ,J. ,Dinakaran ,
× RELATED 100 நாட்கள் மது அருந்தாமல் இருந்ததை...