×

பேருந்து நிழற்குடை சீரமைப்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே, பெருமாநல்லூர் கிராம சாலையில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. இதனை, திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். பயணிகள் வசதிக்காக கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மாட்டுத் தொழுவமாக மாற்றி வைக்கோல், குப்பை கழிவுகள் கொட்டி வைத்திருந்தனர். இதனால், பயணிகள் வசதிக்காக கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை பயனற்று வீணாகி வந்தது.

இதுகுறித்து, தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தி எதிரொலியாக, திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் உத்தரவின் பேரில், ஊராட்சி மன்ற தலைவர் மாலதி வெங்கடேசன் முன்னிலையில், ஊராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த வைக்கோல் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். இதனையடுத்து, இந்த பேருந்து நிழற்குடை பயணிகள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இதனால், அப்பகுதி மகிழ்ச்சி அடைந்தனர்.

The post பேருந்து நிழற்குடை சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Pallipattu ,Tiruthani Assembly ,Constituency ,Perumanallur ,road ,Thiruthani S. Chandran ,MLA ,Dinakaran ,
× RELATED பள்ளிப்பட்டு சாலையில் விவசாயி பலி;...