×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு விழிப்புணர்வு

புழல்: செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பது குறித்து செயல்முறை விளக்கம் சென்னை புறநகர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் தென்னரசு மேற்பார்வையிலும், செங்குன்றம் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்தும், திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைப்பது, பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்படுவதை எவ்வாறு தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்முறை விளக்கங்களை, செங்குன்றம் தீயணைப்புத்துறை வீரர்களால், பள்ளி மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர், பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Diwali ,Senggunram Government Girls Higher Secondary School campus ,Sengunram Government Girls High School ,
× RELATED புகை மண்டலமானது டெல்லியில் காற்று...