×

பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் கிராமத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.பிரசாத் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமார், பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா, பேரூர் செயலாளர் ஷேக்தாவுத், அவைத்தலைவர் அருணாசலம், சம்பத், ஜோதி, யசோதா கோவிந்தசாமி, சுதாகர், உமா நாகையன், மதன் குமார், வக்கில் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் ஆகியோர் சிறப்புரையாற்றி புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் தமிழகத்தின் முதல்வராக்குவது, பூண்டி ஒன்றியத்தில் உள்ள 190 கிளைகளிலிலும் அதிக வாக்குகளை கிளை செயலாளர்கள் பெற்றுத் தர பாடுபடவேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில், மாவட்ட பிரதிநிதி ராஜா நன்றி கூறினார்.

பெரியபாளையம்: எல்லாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில், அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் விஜயன், நிர்வாகிகள் வித்யாலட்சுமி வேதகிரி, காயத்திரி கோதண்டன், தயாகர், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் ஆகியோர் கலந்துகொண்டு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினர். இதில், ஒன்றிய துணைத்தலைவர் சுரேஷ், கவுன்சிலர்கள் லதா அசோக், ஜெயலட்சுமி குமார், ஊராட்சி தலைவர் லட்சுமி திருமலை, துணைத்தலைவர் மகேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், பார்த்திபன் நன்றி கூறினார்.

The post பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Bundi East Union ,AIADMK ,Oothukottai ,Tiruvallur North District ,Bondavakkam ,Eastern Union ,PM Prasad ,MLA ,K.S. Vijayakumar ,Bundi Union ,Bundi East Union AIADMK ,
× RELATED அதிமுக மாவட்ட செயலாளர் தேடப்படும் நபராக அறிவிப்பு..!!